ஹதீஸ்கள்
#1821
ஸஹீஹ் அல்-புகாரீ - Penalty of Hunting while on Pilgrimage
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஹுதைபியா ஆண்டில் (மக்கா வுக்குப்) புறப்பட்டேன். என் தோழர்கள் இஹ்ராம் கட்டியிருந்தனர்; நான் இஹ்ராம் கட்டவில்லை. எதிரிகள் நபி (ஸல்) அவர்கள்மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக் கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அந்தப் படையை எதிர் கொள்ள முன்னே) புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர் களுடன் (சென்றுகொண்டு) இருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர். அப்போது நான் கூர்ந்து கவனித்தேன். ஒரு காட்டுக் கழுதை எனக்குத் தென் பட்டது. அதைத் தாக்கி ஈட்டியால் குத்தி (ஓடி விடாமல்) நிறுத்திவிட்டேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் கட்டியிருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் இறைச்சியை நாங்கள் உண்டோம். (எங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த) நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோமோ என்று நாங்கள் அஞ்சினோம். நபி (ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூ கிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, “நபி (ஸல்) அவர்களை எங்கே விட்டுவந்தீர்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர்களை ‘தஅஹன்’ எனும் நீர்நிலை அருகே விட்டுவந்தேன். அவர்கள் ‘சுக்யா’ எனும் சிற்றூரில் ஓய்வெடுக்கச் சென்றுகொண்டிருந்தார்கள்” என்று கூறினார். (நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து), “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு (முகமன் கூறி) சாந்தியும் இறை வளமும் கிடைத்திட பிரார்த்திக்கிறார்கள். உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சு கிறார்கள். எனவே, (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன்: அதில் சிறிதளவு என்னிடம் மீதி உள்ளது!” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் மக்களி டம் “உண்ணுங்கள்” என்றார்கள். (அப் போது) அம்மக்கள் இஹ்ராம் கட்டியிருந் தார்கள். அத்தியாயம் :
حدثنا معاذ بن فضالة، حدثنا هشام، عن يحيى، عن عبد الله بن ابي قتادة، قال انطلق ابي عام الحديبية فاحرم اصحابه، ولم يحرم، وحدث النبي صلى الله عليه وسلم ان عدوا يغزوه، فانطلق النبي صلى الله عليه وسلم، فبينما انا مع اصحابه يضحك بعضهم الى بعض، فنظرت فاذا انا بحمار وحش، فحملت عليه، فطعنته، فاثبته، واستعنت بهم، فابوا ان يعينوني، فاكلنا من لحمه، وخشينا ان نقتطع، فطلبت النبي صلى الله عليه وسلم ارفع فرسي شاوا، واسير شاوا، فلقيت رجلا من بني غفار في جوف الليل قلت اين تركت النبي صلى الله عليه وسلم قال تركته بتعهن، وهو قايل السقيا. فقلت يا رسول الله ان اهلك يقرءون عليك السلام ورحمة الله، انهم قد خشوا ان يقتطعوا دونك، فانتظرهم قلت يا رسول الله اصبت حمار وحش، وعندي منه فاضلة. فقال للقوم " كلوا " وهم محرمون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Penalty of Hunting while on Pilgrimage
- Hadith Index
- #1821
- Book Index
- 1
Grades
- -
