ஹதீஸ்கள்
#1817
ஸஹீஹ் அல்-புகாரீ - Pilgrims Prevented from Completing the Pilgrimage
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியிருந்த) என் முகத்தில் பேன்கள் விழுந்து கொண் டிருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். “உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நான் ஹுதைபியாவில் இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு, அங்கு (ஹுதைபியாவில்)தான் இஹ்ராமிலிருந்து விடுபடப்போகிறார்கள் என்பது அப்போது தெளிவாகாமல் இருந்தது. இந்நிலையில்தான், அல்லாஹ் பரிகாரம் தொடர்பான வசனத்தை அருளினான். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூன்று ஸாஉ தானியத்தை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்; அல்லது ஓர் ஆட்டைப் பலியிட வேண்டும்; அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்” என்று எனக்குக் கட்டளை யிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق، حدثنا روح، حدثنا شبل، عن ابن ابي نجيح، عن مجاهد، قال حدثني عبد الرحمن بن ابي ليلى، عن كعب بن عجرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم راه وانه يسقط على وجهه فقال " ايوذيك هوامك ". قال نعم. فامره ان يحلق وهو بالحديبية، ولم يتبين لهم انهم يحلون بها، وهم على طمع ان يدخلوا مكة، فانزل الله الفدية، فامره رسول الله صلى الله عليه وسلم ان يطعم فرقا بين ستة، او يهدي شاة، او يصوم ثلاثة ايام
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Pilgrims Prevented from Completing the Pilgrimage
- Hadith Index
- #1817
- Book Index
- 12
Grades
- -
