ஹதீஸ்கள்
#1816
ஸஹீஹ் அல்-புகாரீ - Pilgrims Prevented from Completing the Pilgrimage
அப்துல்லாஹ் பின் மஅகல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன்; (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள், “என் தொடர்பாகவே அந்த இறைவசனம் (2:196) அருளப்பெற்றது; என்றாலும், அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்துகொண்டிருக்க, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன்; நபி (ஸல்) அவர்கள், ‘உமக்கு இவ்வளவு அதிகமாக வேதனை ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை, அல்லது ‘உமக்கு இந்த அளவுக்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை’ என்று கூறிவிட்டு, உம்மிடம் ஓர் ஆடு இருக்கி றதா?’ என்று கேட்டார்கள்; நான் ‘இல்லை!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘(தலையை மழித்துக்கொண்டு) மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் அரை ‘ஸாஉ’ வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக!’ என்று கூறினார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن عبد الرحمن بن الاصبهاني، عن عبد الله بن معقل، قال جلست الى كعب بن عجرة رضى الله عنه فسالته عن الفدية، فقال نزلت في خاصة، وهى لكم عامة، حملت الى رسول الله صلى الله عليه وسلم والقمل يتناثر على وجهي فقال " ما كنت ارى الوجع بلغ بك ما ارى او ما كنت ارى الجهد بلغ بك ما ارى، تجد شاة ". فقلت لا. فقال " فصم ثلاثة ايام، او اطعم ستة مساكين، لكل مسكين نصف صاع
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Pilgrims Prevented from Completing the Pilgrimage
- Hadith Index
- #1816
- Book Index
- 11
Grades
- -
