ஹதீஸ்கள்
#1797
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிலிருந்தோ அறப்போரிலிருந்தோ திரும்பும்போது மேடான இடங்களில் ஏறும்போதெல்லாம் மூன்று முறை தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள். மேலும், “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்; ஆயிபூன தாயிபூன, ஆபிதூன, சாஜிதூன, லி ரப்பினா ஹாமிதூன்; ஸத(க்)கல்லாஹு வஅதஹு, வ நஸர அப்தஹு, வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்” என்று கூறுவார்கள். (பொருள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சி யதிகாரம் அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்தின்மீதும் பேராற்றலுடையோன்; நாங்கள் பாவ மன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், (எங்கள் இறையை வழிபட்டவர்களாகவும், சஜ்தா செய்தவர்களாகவும்; எங்கள் இறையைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்பு கிறோம்; அல்லாஹ் தனது வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான்; தன் அடியாருக்கு (முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு) உதவி செய்துவிட்டான். (எதிரிகளின்) கூட்டுப் படைகளைத் தன்னந்தனியாக அவனே தோற்கடித்துவிட்டான்) அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم كان اذا قفل من غزو او حج او عمرة يكبر على كل شرف من الارض ثلاث تكبيرات، ثم يقول " لا اله الا الله وحده لا شريك له، له الملك، وله الحمد، وهو على كل شىء قدير، ايبون تايبون عابدون ساجدون لربنا حامدون، صدق الله وعده ونصر عبده وهزم الاحزاب وحده
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1797
- Book Index
- 22
Grades
- -
