ஹதீஸ்கள்
#1796
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமை) அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள், (மக்காவிலுள்ள) ‘அல்ஹஜூன்’ என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம், “முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் கருணை புரிவானாக! (விடைபெறும் ஹஜ்ஜின்போது) நாங்கள் அவர்களுடன் இங்கு வந்து இறங்கினோம்; அப்போது எங்களிடம் (பயண) மூட்டை முடிச்சுகள் குறைவாகவே இருந்தன; (பயண) வாகனங்களும் உணவுகளும் குறைவாகவே இருந்தன; அப்போது நானும், என் சகோதரி ஆயிஷா (ரலி), (என் கணவர்) ஸுபைர் (ரலி) ஆகியோரும், மற்றும் இன்னாரும் இன்னாரும் உம்ராவுக் காக இஹ்ராம் கட்டியிருந்தோம்; கஅபாவை தவாஃப் செய்ததும் இஹ்ராமி லிருந்து விடுபட்டுவிட்டோம். பிறகு மாலையில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினோம்” என அஸ்மா (ரலி) அவர்கள் கூறுவார்கள்.17 அத்தியாயம் :
حدثنا احمد بن عيسى، حدثنا ابن وهب، اخبرنا عمرو، عن ابي الاسود، ان عبد الله، مولى اسماء بنت ابي بكر حدثه انه، كان يسمع اسماء تقول كلما مرت بالحجون صلى الله على محمد لقد نزلنا معه ها هنا، ونحن يوميذ خفاف، قليل ظهرنا، قليلة ازوادنا، فاعتمرت انا واختي عايشة والزبير وفلان وفلان، فلما مسحنا البيت احللنا، ثم اهللنا من العشي بالحج
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1796
- Book Index
- 21
Grades
- -
