ஹதீஸ்கள்
#1795
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘அல்பத்ஹா’ எனுமிடத்தில் ஒட்டகத்தை இளைப்பாற வைத்துக்கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “ஹஜ் செய்ய நாடியுள்ளீரா?” எனக் கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றதும், “எதற்காக இஹ்ராம் கட்டினீர்?” என்று கேட்டார்கள். நான் “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே இஹ்ராம் கட்டியுள்ளேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “நன்றே செய்தீர். இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக் கிடையே ‘சயீ’ செய்துவிட்டு இஹ்ராமி லிருந்து விடுபட்டுவிடுவீராக!” எனக் கூறினார்கள். நான் அவ்வாறே கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்துவிட்டு, பனூ கைஸ் கோத்திரத் தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவின ரான) ஒரு பெண்ணிடம் வந்தேன். அவர் எனது தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினேன். இந்த அடிப்படையிலேயே நான் உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலம்வரை மக்களுக்குத் தீர்ப்பளித்துக் கொண்டிருந்தேன். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தைப் பார்த்தால் அது நம்மை (ஹஜ்ஜையும் உம்ராவையும்) முழுமைப்படுத்துமாறு கட்டளையிடுகிறது; நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பார்த்தாலும், குர்பானி பிராணி அதற்குரிய இடத்தை அடையும்வரை இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபடவில்லை எனத் தெரிகிறது!” என்று கூறினார்கள்.16 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن قيس بن مسلم، عن طارق بن شهاب، عن ابي موسى الاشعري رضى الله عنه قال قدمت على النبي صلى الله عليه وسلم بالبطحاء وهو منيخ فقال " احججت ". قلت نعم. قال " بما اهللت ". قلت لبيك باهلال كاهلال النبي صلى الله عليه وسلم قال " احسنت. طف بالبيت وبالصفا والمروة ثم احل ". فطفت بالبيت، وبالصفا والمروة، ثم اتيت امراة من قيس، ففلت راسي، ثم اهللت بالحج. فكنت افتي به، حتى كان في خلافة عمر فقال ان اخذنا بكتاب الله فانه يامرنا بالتمام، وان اخذنا بقول النبي صلى الله عليه وسلم فانه لم يحل حتى يبلغ الهدى محله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1795
- Book Index
- 20
Grades
- -
