ஹதீஸ்கள்
#1794
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “உம்ராவில் ஒருவர் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே தவாஃப் செய்யாமலேயே தம் மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) வரலாமா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மக்கா) வந்ததும் இறையில்லம் கஅபாவை ஏழு முறை தவாஃப் செய்து விட்டு, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதபின் ஸஃபா-மர்வா வுக்கிடையே ஏழு முறை ‘சயீ’ செய்தார்கள்; எனவே, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!” எனக் கூறினார்கள். நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யாமல் ஒருவர் தம் மனைவியை நெருங்கக் கூடாது” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، عن عمرو بن دينار، قال سالنا ابن عمر رضى الله عنهما عن رجل، طاف بالبيت في عمرة، ولم يطف بين الصفا والمروة، اياتي امراته فقال قدم النبي صلى الله عليه وسلم فطاف بالبيت سبعا، وصلى خلف المقام ركعتين، وطاف بين الصفا والمروة سبعا، وقد كان لكم في رسول الله اسوة حسنة. قال وسالنا جابر بن عبد الله رضى الله عنهما فقال لا يقربنها حتى يطوف بين الصفا والمروة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1794
- Book Index
- 19
Grades
- -
