ஹதீஸ்கள்
#1791
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறிய தவாது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘களா’) உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். நாங்களும் அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினோம். அவர்கள் மக்காவில் நுழைந்ததும் தவாஃப் செய்தார்கள். நாங்களும் அவர்களுடன் தவாஃப் செய்தோம். அவர்கள் ஸஃபா-மர்வாவுக்கு வந்தார்கள்; நாங்களும் அவர்களுடன் அங்கு வந்தோம். மேலும், மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் நபியவர்களை மறைத்துக்கொண்டிருந்தோம். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் நண்பர் ஒருவர் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (அப்போது) கஅபாவின் உள்ளே சென்றார்களா?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை!” என்றார்கள். பிறகு, அவர், “நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி என்ன கூறினார்கள் என்பதை எங்களுக்கு அறிவியுங்களேன்!” எனக் கேட்டார். அவர்கள், “கதீஜாவுக்கான நற்செய்தி பெறுங்கள்; அவருக்கு சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று உள்ளது. அதில் கூச்சல் குழப்பமோ களைப்போ இருக்காது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، عن جرير، عن اسماعيل، عن عبد الله بن ابي اوفى، قال اعتمر رسول الله صلى الله عليه وسلم واعتمرنا معه فلما دخل مكة طاف وطفنا معه، واتى الصفا والمروة واتيناها معه، وكنا نستره من اهل مكة ان يرميه احد. فقال له صاحب لي اكان دخل الكعبة قال لا. قال فحدثنا ما، قال لخديجة. قال " بشروا خديجة ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1791
- Book Index
- 18
Grades
- -
