ஹதீஸ்கள்
#1789
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருந்தபோது, நறுமணப் பொருளின் அடையாளமோ அல்லது மஞ்சள் நிறமோ உள்ள மேலங்கி அணிந் திருந்த ஒருவர் அவர்களிடம் வந்தார். அவர், “நான் என் உம்ராவில் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டளையிடு கிறீர்கள்?” எனக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்தான். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஒரு துணியால் மறைக்கப்பட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படும் போது அவர்களைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன். உமர் (ரலி) அவர்கள், “இங்கு வாரும்! நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அருளும் போது அவர்களைப் பார்க்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரா?” எனக் கேட்டார் கள். நான் ‘ஆம்’ என்றேன். உடனே (நபி (ஸல்) அவர்களை மறைத்திருந்த) அந்தத் துணியின் ஓரத்தை உமர் (ரலி) அவர்கள் விலக்கினார்கள். நான் நபி (ஸல்) அவர்களை உற்று நோக்கினேன். அப்போது குறட்டை சப்தம் -ஒட்டகத்தின் குறட்டை சப்தம் என்று சொன்னதாகவே எண்ணுகிறேன்- அவர் களிடமிருந்து வந்தது. பிறகு (வஹீயின்) அந்நிலை அவர்களைவிட்டு விலகியபோது அவர்கள், “உம்ராவைப் பற்றிக் கேள்வி கேட்டவர் எங்கே?” எனக் கேட்டுவிட்டு (அவரிடம்), “உமது மேலங்கியைக் கழற்றி நறுமணப் பொருளின் அடையாளத்தைக் கழுவிவிட்டு, மஞ்சள் நிறத்தையும் அகற்றிவிடுவீராக! மேலும், நீர் ஹஜ்ஜில் செய்வதைப் போன்று உம்ராவிலும் செய்வீராக!” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا همام، حدثنا عطاء، قال حدثني صفوان بن يعلى بن امية يعني، عن ابيه، ان رجلا، اتى النبي صلى الله عليه وسلم وهو بالجعرانة وعليه جبة وعليه اثر الخلوق او قال صفرة فقال كيف تامرني ان اصنع في عمرتي فانزل الله على النبي صلى الله عليه وسلم، فستر بثوب ووددت اني قد رايت النبي صلى الله عليه وسلم وقد انزل عليه الوحى. فقال عمر تعال ايسرك ان تنظر الى النبي صلى الله عليه وسلم وقد انزل الله الوحى قلت نعم. فرفع طرف الثوب، فنظرت اليه له غطيط واحسبه قال كغطيط البكر. فلما سري عنه قال " اين السايل عن العمرة اخلع عنك الجبة واغسل اثر الخلوق عنك، وانق الصفرة، واصنع في عمرتك كما تصنع في حجك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1789
- Book Index
- 16
Grades
- -
