ஹதீஸ்கள்
#1788
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹஜ் மாதங்களில், ஹஜ் கிரியைகளில் (பங்கேற்க) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (மதீனாவிலிருந்து) புறப் பட்டோம். ‘சரிஃப்’ எனும் இடத்திற்கு வந்து தங்கினோம்.12 அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “யார் குர்பானி பிராணி கொண்டுவராமல் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்துகொள்ளட்டும்! யாரிடம் குர்பானி பிராணி உள்ளதோ அவர் அவ்வாறு செய்ய வேண்டாம்” எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடமும் அவர்களு டைய தோழர்களில் வசதி படைத்தவர் களிடமும் குர்பானி பிராணிகள் இருந்தன. எனவே, அவர்களுக்கு (தனியான) உம்ரா இல்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, நான் அழுது கொண்டிருந்தேன். அவர்கள் “ஏன் அழுகி றாய்?” எனக் கேட்டார்கள். “நீங்கள் உங்கள் தோழர்களிடம் கூறியதை நான் செவியுற் றேன்; ஆனால், நான் உம்ரா செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுவிட்டேன்” என்றேன். அதற்கு அவர்கள், “என்ன காரணம்?” எனக் கேட்டதும், “நான் தொழுகை இல்லாமல் இருக்கிறேன்” என்றேன். அவர்கள், “அதனால் உனக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நீ ஆதமின் பெண்மக்களில் ஒருத்தியே! அவர்களுக்கு விதிக்கப்பட்டது தான் உனக்கும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீ ஹஜ் செய்துகொண்டிரு. அல்லாஹ் உனக்கு (உம்ரா செய்யவும்) வாய்ப்பளிக்கக்கூடும்!” என்றார்கள். நாங்கள் மினாவிலிருந்து புறப்படும் வரை நான் அப்படியே (ஹஜ்ஜில்) இருந்தேன். பிறகு (நான் தூய்மையானபின்) அல்முஹஸ்ஸப் வந்து தங்கினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, “உன் சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளட்டும்! பிறகு நீங்களிருவரும் தவாஃபை முடித்துக்கொள்ளுங்கள்! உங்களுக்காக நான் இந்த இடத்தில் காத்திருப்பேன்” என்றார்கள். நாங்கள் (தவாஃபை முடித்து) நடுநிசியில் வந்தபோது, “(தவாஃபை) முடித்துவிட்டீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் புறப்படுமாறு அறிவித்தார் கள். மக்களும், சுப்ஹுக்கு முன்பே கஅபா ஆலயத்தை தவாஃப் (வதா) செய்தவர்களும் புறப்படத் தயாரானதும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கிப் பயணமானார்கள்.13 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا افلح بن حميد، عن القاسم، عن عايشة رضى الله عنها قالت خرجنا مهلين بالحج في اشهر الحج، وحرم الحج، فنزلنا سرف، فقال النبي صلى الله عليه وسلم لاصحابه " من لم يكن معه هدى، فاحب ان يجعلها عمرة، فليفعل ومن كان معه هدى فلا ". وكان مع النبي صلى الله عليه وسلم ورجال من اصحابه ذوي قوة الهدى، فلم تكن لهم عمرة، فدخل على النبي صلى الله عليه وسلم وانا ابكي فقال " ما يبكيك ". قلت سمعتك تقول لاصحابك ما قلت فمنعت العمرة. قال " وما شانك ". قلت لا اصلي. قال " فلا يضرك انت من بنات ادم، كتب عليك ما كتب عليهن، فكوني في حجتك عسى الله ان يرزقكها ". قالت فكنت حتى نفرنا من منى، فنزلنا المحصب فدعا عبد الرحمن، فقال " اخرج باختك الحرم، فلتهل بعمرة، ثم افرغا من طوافكما، انتظركما ها هنا ". فاتينا في جوف الليل. فقال " فرغتما ". قلت نعم. فنادى بالرحيل في اصحابه، فارتحل الناس، ومن طاف بالبيت، قبل صلاة الصبح، ثم خرج موجها الى المدينة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1788
- Book Index
- 15
Grades
- -
