ஹதீஸ்கள்
#1787
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
காசிம் பின் முஹம்மத் (ரஹ்), அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! “மக்கள் அனைவரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரண்டு வழிபாடுகளுடன் திரும்பு கின்றனர்; நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு வழிபாட்டுடன் திரும்புகிறேனே?” என்று கேட்டார்கள். அவர்களிடம், “நீ சற்றுக் காத்திருந்து, (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் தன்யீமுக்குச் சென்று (உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிக்கொள்! பிறகு (நீயும் உன் சகோதரரும்) எங்களை இன்ன இடத்தில் வந்து சந்தியுங்கள்! ஆனால், உம்ராவுக்கான நற்பலன் உனது சிரமத்திற்கோ, பொருட் செலவுக்கோ தக்கவாறுதான் கிடைக்கும்!” என (நபி (ஸல்) அவர்களால்) சொல்லப்பட்டது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يزيد بن زريع، حدثنا ابن عون، عن القاسم بن محمد، وعن ابن عون، عن ابراهيم، عن الاسود، قالا قالت عايشة رضى الله عنها يا رسول الله يصدر الناس بنسكين واصدر بنسك فقيل لها " انتظري، فاذا طهرت فاخرجي الى التنعيم، فاهلي ثم ايتينا بمكان كذا، ولكنها على قدر نفقتك، او نصبك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1787
- Book Index
- 14
Grades
- -
