ஹதீஸ்கள்
#1786
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதிர் நோக்கியவர் களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ, அவர் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்; யார் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ அவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்ளட் டும்! நான் குர்பானி பிராணியைக் கொண்டுவந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டியிருப்பேன்” என்றார்கள். சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி னர். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிய வர்களில் ஒருத்தியாக இருந்தேன். ஆனால், மக்காவில் நுழைவதற்குமுன் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடா யுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது பற்றி) நான் முறையிட்டபோது, “உனது உம்ராவை விட்டுவிட்டு; தலையை அவிழ்த்து, வாரிக் கொள்! மேலும், ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!” என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். அல்முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை ‘தன்யீம்’வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்துர் ரஹ்மான் தமது ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றிக்கொண்டார். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக, மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் கட்டினேன். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ், ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான். இதற்காக, ஆயிஷா (ரலி) அவர்கள் குர்பானியோ, தர்மமோ, நோன்போ பரிகாரமாகச் செய்யவில்லை. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا يحيى، حدثنا هشام، قال اخبرني ابي قال، اخبرتني عايشة رضى الله عنها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم موافين لهلال ذي الحجة، فقال رسول الله صلى الله عليه وسلم " من احب ان يهل بعمرة فليهل، ومن احب ان يهل بحجة فليهل، ولولا اني اهديت لاهللت بعمرة ". فمنهم من اهل بعمرة، ومنهم من اهل بحجة، وكنت ممن اهل بعمرة، فحضت قبل ان ادخل مكة، فادركني يوم عرفة، وانا حايض، فشكوت الى رسول الله صلى الله عليه وسلم فقال " دعي عمرتك، وانقضي راسك وامتشطي، واهلي بالحج ". ففعلت، فلما كانت ليلة الحصبة ارسل معي عبد الرحمن الى التنعيم، فاردفها، فاهلت بعمرة مكان عمرتها، فقضى الله حجها وعمرتها، ولم يكن في شىء من ذلك هدى، ولا صدقة، ولا صوم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1786
- Book Index
- 13
Grades
- -
