ஹதீஸ்கள்
#1785
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (விடைபெறும் ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர் களும் ஹஜ்ஜுக்ôக இஹ்ராம் கட்டினார் கள். நபி (ஸல்) மற்றும் தல்ஹா (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானி பிராணி இருக்கவில்லை. யமனி லிருந்து அலீ (ரலி) அவர்கள் குர்பானி பிராணியுடன் வந்தார்கள். “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டியுள் ளார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன்” என அவர்கள் கூறி னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் குர்பானி பிராணி கொண்டுவந்தவர்கள் தவிர மற்றவர்கள் தங்களின் இஹ்ராமை உம்ராவுக்காக மாற்றிக்கொள்ளுமாறும் தவாஃப் செய்து, தலைமுடியைக் குறைத்து, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள் (சிலர்), “(இஹ்ராமிலிருந்து விடுபட்டபின்) தாம்பத்திய உறவை முடித்த கையோடு நாங்கள் மினாவுக்குச் செல்வதா?” என்று பேசிக்கொண்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் “(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என) நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், நான் குர்பானி பிராணி கொண்டுவந்திருக்கமாட்டேன்; நான் குர்பானி பிராணியை மட்டும் கொண்டுவந்திருக்க வில்லையாயின், இஹ்ராமிலிருந்து விடு பட்டிருப்பேன்” எனக் கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதைத் தவிர, ஹஜ்ஜின் மற்றெல்லா கிரியைகளையும் நிறைவேற்றினார்கள்; மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை தவாஃப் செய்தார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்ல, நீங்கள் (எல்லாரும்) ஹஜ்ஜையும் உம்ரா வையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர் களே?” என (ஏக்கத்துடன்) கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா வின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை, ஆயிஷா (ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட இஹ்ராம் கட்டுவதற்காக) ‘தன்யீம்’ என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி, ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்தபின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்துகொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்த சுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்வது), உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை. இது எப்போதைக்கும் உரியதே” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا عبد الوهاب بن عبد المجيد، عن حبيب المعلم، عن عطاء، حدثني جابر بن عبد الله رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم اهل واصحابه بالحج وليس مع احد منهم هدى، غير النبي صلى الله عليه وسلم وطلحة، وكان علي قدم من اليمن، ومعه الهدى فقال اهللت بما اهل به رسول الله صلى الله عليه وسلم. وان النبي صلى الله عليه وسلم اذن لاصحابه ان يجعلوها عمرة، يطوفوا بالبيت، ثم يقصروا ويحلوا، الا من معه الهدى، فقالوا ننطلق الى منى وذكر احدنا يقطر فبلغ النبي صلى الله عليه وسلم فقال " لو استقبلت من امري ما استدبرت ما اهديت، ولولا ان معي الهدى لاحللت ". وان عايشة حاضت فنسكت المناسك كلها، غير انها لم تطف بالبيت قال فلما طهرت وطافت، قالت يا رسول الله اتنطلقون بعمرة وحجة، وانطلق بالحج فامر عبد الرحمن بن ابي بكر ان يخرج معها الى التنعيم، فاعتمرت بعد الحج في ذي الحجة، وان سراقة بن مالك بن جعشم لقي النبي صلى الله عليه وسلم وهو بالعقبة، وهو يرميها، فقال الكم هذه خاصة، يا رسول الله قال " لا، بل للابد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1785
- Book Index
- 12
Grades
- -
