ஹதீஸ்கள்
#1783
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது துல்கஅதாவைப் பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ்ஜின் பிறையை எதிர்நோக்கியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ அவர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்; யார் உம்ரா செய்ய விரும்புகிறாரோ அவர் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். நான் குர்பானிப் பிராணியைக் கொண்டுவர வில்லையானால் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருப்பேன்” எனக் கூறினார்கள். எனவே, எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக் காக இஹ்ராம் கட்டினர்; நான் உம்ராவுக் காக இஹ்ராம் கட்டியவர்களில் ஒருத்தி யாவேன். இந்நிலையில், அரஃபா நாள் நெருங்கியதும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. எனவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள், “உனது உம்ராவை விட்டுவிட்டு உனது தலைமுடியை அவிழ்த்து வாரிக் கொள்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்” என்றார்கள். அல்முஹஸ்ஸபில் தங்குவதற்கான இரவு வந்தபோது (துல்ஹஜ் பத்தாம் நாள் நான் தூய்மையடைந்தபின்) என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி தன்யீம் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார்கள். நான் எனது விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக (அங்கு) இஹ்ராம் கட்டினேன். அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، اخبرنا ابو معاوية، حدثنا هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها خرجنا مع رسول الله صلى الله عليه وسلم موافين لهلال ذي الحجة فقال لنا " من احب منكم ان يهل بالحج فليهل ومن احب ان يهل بعمرة فليهل بعمرة، فلولا اني اهديت لاهللت بعمرة ". قالت فمنا من اهل بعمرة، ومنا من اهل بحج، وكنت ممن اهل بعمرة، فاظلني يوم عرفة، وانا حايض، فشكوت الى النبي صلى الله عليه وسلم فقال " ارفضي عمرتك، وانقضي راسك وامتشطي، واهلي بالحج ". فلما كان ليلة الحصبة ارسل معي عبد الرحمن الى التنعيم، فاهللت بعمرة مكان عمرتي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1783
- Book Index
- 10
Grades
- -
