ஹதீஸ்கள்
#1768
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடம் ‘அல்முஹஸ்ஸப்’ பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் அந்த இடத்தில் தங்கியிருக்கிறார்கள்” என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக எங்களிடம் கூறினார்கள். “இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்முஹஸ்ஸபில் லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழுவது வழக்கம்” என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். மஃக்ரிப் தொழுகைகயையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவார் கள் என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்றே நான் நினைக்கிறேன் எனவும் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இஷாவையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுதார்கள் (என நாஃபிஉ (ரஹ்) அவர்கள், உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்) என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. “(இஷாவைத் தொழுத) பிறகு இப்னு உமர் (ரலி) அவர்கள் சிறிது நேரம் (அங்கேயே) உறங்கிவிடுவார்கள்; மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்” எனவும் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாக, உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن عبد الوهاب، حدثنا خالد بن الحارث، قال سيل عبيد الله عن المحصب، فحدثنا عبيد الله، عن نافع،، قال نزل بها رسول الله صلى الله عليه وسلم وعمر وابن عمر. وعن نافع ان ابن عمر رضى الله عنهما كان يصلي بها يعني المحصب الظهر والعصر احسبه قال والمغرب. قال خالد لا اشك في العشاء، ويهجع هجعة، ويذكر ذلك عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1768
- Book Index
- 244
Grades
- -
