ஹதீஸ்கள்
#1767
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘தூ துவா’ விலுள்ள இரண்டு கணவாய்களுக் கிடையே இரவில் தங்குவார்கள். பிறகு மக்காவின் மேற்பகுதியிலுள்ள கணவாய் வழியாக மக்காவிற்குள் நுழைவார்கள். அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக் காகவோ மக்காவுக்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் தலைவாயில் அருகேதான் ஒட்டகத்தைப் படுக்க வைப்பார்கள். பிறகு, மஸ்ஜிதில் நுழைந்து, ஹஜருல் அஸ்வதுக்கு வந்து, அங்கிருந்து ஆரம்பித்து (கஅபாவை) ஏழு முறை சுற்றுவார்கள். (முதல்) மூன்று சுற்றுகளில் விரைவாக நடந்தும் (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடந்தும் தவாஃப் செய்வார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு தமது இருப்பிடத்திற்குத் திரும்புவதற்கு முன்பாகச் சென்று ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றுவார்கள். மேலும், அவர்கள் ஹஜ்ஜையோ உம்ராவையோ முடித்துவிட்டு (மதீனாவுக் குத்) திரும்பும்போது, நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்துத் தங்கிய, ‘துல்ஹுலைஃபா’விலுள்ள ‘அல்பத்ஹா’ எனுமிடத்தில் வாகனத்தைப் படுக்கவைத்துத் தங்குவார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، حدثنا ابو ضمرة، حدثنا موسى بن عقبة، عن نافع، ان ابن عمر رضى الله عنهما كان يبيت بذي طوى بين الثنيتين، ثم يدخل من الثنية التي باعلى مكة، وكان اذا قدم مكة حاجا او معتمرا لم ينخ ناقته الا عند باب المسجد، ثم يدخل فياتي الركن الاسود فيبدا به، ثم يطوف سبعا ثلاثا سعيا، واربعا مشيا، ثم ينصرف فيصلي سجدتين، ثم ينطلق قبل ان يرجع الى منزله، فيطوف بين الصفا والمروة، وكان اذا صدر عن الحج او العمرة اناخ بالبطحاء التي بذي الحليفة التي كان النبي صلى الله عليه وسلم ينيخ بها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1767
- Book Index
- 243
Grades
- -
