ஹதீஸ்கள்
#1759
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஒரு பெண் (ஹஜ்ஜில் இஃபாளா) தவாஃப் செய்தபிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?” எனக் கேட்டனர். அதற்கு அவர்கள், “அவள் (தவாஃபுல் வதா செய்யாமல்) போய்விட வேண்டி யதுதான்” என்றார்கள். அப்போது மக்கள், “உங்கள் கூற்றை எடுத்துக்கொண்டு, ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் கூற்றை விட்டுவிட நாங்கள் தயாரில்லை” என்றனர். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றதும் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப்பாருங்கள்” என்றார்கள். மக்கள் மதீனா சென்றதும் இது பற்றிக் கேட்டார்கள். அவர்கள் (விளக்கம்) கேட்டவர்களில் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ஸஃபிய்யா (ரலி) அவர்களின் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد، عن ايوب، عن عكرمة، ان اهل المدينة، سالوا ابن عباس رضى الله عنهما عن امراة، طافت ثم حاضت، قال لهم تنفر. قالوا لا ناخذ بقولك وندع قول زيد. قال اذا قدمتم المدينة فسلوا. فقدموا المدينة فسالوا، فكان فيمن سالوا ام سليم، فذكرت حديث صفية. رواه خالد وقتادة عن عكرمة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1759
- Book Index
- 236
Grades
- -
