ஹதீஸ்கள்
#1750
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்தபடி, (அல்பகரா அத்தியாயம் என்று கூறாமல்) ‘பசுமாடு பற்றிக் கூறப்படுகின்ற அத்தியாயம்’ என்றும், (ஆலு இம்ரான் அத்தியாயம் என்று கூறாமல்) ‘இம்ரானின் சந்ததிகள் பற்றிக் கூறப்படுகின்ற அத்தியாயம்’ என்றும், (அந்நிசா அத்தியாயம் என்று கூறாமல்) ‘பெண்கள் பற்றிக் கூறப்படும் அத்தியாயம்’ என்றும் கூறியதை நான் செவியுற்றேன். இது பற்றி நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் கூறியபோது அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகத் தெரிவித்தார்கள்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்போது நான் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் பத்னுல் வாதி எனும் பள்ளத்தில் இறங்கி, அதில் உள்ள மரத்திற்கு நேராக வந்ததும் அதன் குறுக்கே நின்றுகொண்டு ஏழு கற்களை (ஒவ்வொன்றாக) எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள். “பிறகு அல்லாஹ்வின் மீதாணையாக! யாருக்கு அல்பகரா அத்தியாயம் அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில்தான் (கல்லெறிந் தபடி) நின்றார்கள்” என இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، عن عبد الواحد، حدثنا الاعمش، قال سمعت الحجاج، يقول على المنبر السورة التي يذكر فيها البقرة، والسورة التي يذكر فيها ال عمران، والسورة التي يذكر فيها النساء. قال فذكرت ذلك لابراهيم، فقال حدثني عبد الرحمن بن يزيد انه كان مع ابن مسعود رضى الله عنه حين رمى جمرة العقبة، فاستبطن الوادي، حتى اذا حاذى بالشجرة اعترضها، فرمى بسبع حصيات، يكبر مع كل حصاة، ثم قال من ها هنا والذي لا اله غيره قام الذي انزلت عليه سورة البقرة صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1750
- Book Index
- 228
Grades
- -
