ஹதீஸ்கள்
#1742
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது புனித நாளாகும்; இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றனர். அப்போது நபியவர்கள் “(இது) புனித நகரமாகும்; இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “(இது) புனித மாதமாகும்” எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எந்த அளவுக்குப் புனித மானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் அல்லாஹ் புனிதமாக்கியுள்ளான்” எனக் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள், மேற்கொண்ட ஹஜ்ஜின்போது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் (ஷைத்தானுக்குக் கல்லெறியும் இடங் களான) ‘ஜம்ரா’க்கள் இடையே நின்று கொண்டு இந்த ஹதீஸைக் கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது. “மேலும், இது (துல்ஹஜ் பத்தாம் நாள்), மாபெரும் ஹஜ்ஜின் (அல்ஹஜ்ஜுல் அக்பர்) தினமாகும்” என்றும் கூறினார்கள்; மேலும், “இறைவா! நீயே சாட்சி” என்றும் கூறி மக்களிடமிருந்து விடைபெற்றார்கள். எனவே மக்களும், “இது (நபி (ஸல்) அவர்கள் நம்மிடம்) விடைபெற்ற ஹஜ்ஜாகும் (ஹஜ்ஜத்துல் வதா)” எனப் பேசிக்கொண்டனர். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1742
- Book Index
- 220
Grades
- -