ஹதீஸ்கள்
#1741
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர் களா?” எனக் கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்” என்றோம். பிறகு “இது எந்த மாதம்?” என அவர்கள் கேட்டதும் நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கறிவர்” என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, “இது துல்ஹஜ் மாதம் அல்லவா?” என அவர்கள் கேட்க, நாங்கள் “ஆம்” என்றோம். பிறகு “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அப்போதும் அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு “இது புனித நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள் “ஆம்” என்றோம். பிறகு “உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் நீங்கள் உங்கள் இரட்ச கனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?” எனக் கேட்டார்கள். மக்கள் “ஆம்” என்றனர். பிறகு அவர்கள், “இறைவா! இதற்கு நீயே சாட்சி. இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்! ஏனெனில், (ஒன்றைச்) செவியுறுபவரைவிட அவரிடம் செவியுறும் எத்தனையோ பேர் (அதை நன்கு விளங்கி) பாதுகாப்போராக இருக்கலாம். எனக்குப்பின் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد، حدثنا ابو عامر، حدثنا قرة، عن محمد بن سيرين، قال اخبرني عبد الرحمن بن ابي بكرة، عن ابي بكرة،، ورجل، افضل في نفسي من عبد الرحمن حميد بن عبد الرحمن عن ابي بكرة رضى الله عنه قال خطبنا النبي صلى الله عليه وسلم يوم النحر، قال " اتدرون اى يوم هذا ". قلنا الله ورسوله اعلم. فسكت حتى ظننا انه سيسميه بغير اسمه. قال " اليس يوم النحر ". قلنا بلى. قال " اى شهر هذا ". قلنا الله ورسوله اعلم. فسكت حتى ظننا انه سيسميه بغير اسمه. فقال " اليس ذو الحجة ". قلنا بلى. قال " اى بلد هذا ". قلنا الله ورسوله اعلم. فسكت حتى ظننا انه سيسميه بغير اسمه. قال " اليست بالبلدة الحرام ". قلنا بلى. قال " فان دماءكم واموالكم عليكم حرام، كحرمة يومكم هذا، في شهركم هذا، في بلدكم هذا، الى يوم تلقون ربكم. الا هل بلغت ". قالوا نعم. قال " اللهم اشهد، فليبلغ الشاهد الغايب، فرب مبلغ اوعى من سامع، فلا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1741
- Book Index
- 219
Grades
- -
