ஹதீஸ்கள்
#1739
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்தி னார்கள். அப்போது “மக்களே! இது எந்த நாள்?” எனக் கேட்டார்கள். மக்கள் ‘புனித நாள்’ என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். மக்கள் ‘புனித நகரம்’ என்றனர். பிறகு அவர்கள், “இது எந்த மாதம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனித மாதம்!” என்றனர்.66 பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள், “நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” எனப் பல தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, “இறைவா! நான் (உன் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா? இறைவா! நான் (உன் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(வ்விறை)வன் மீது சத்தியமாக! இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாருக்குச் செய்த இறுதி உபதேசமாகும். பின்னர் “இங்கு வந்தவர்கள் வராதவர் களுக்கு இதை அறிவித்துவிடுங்கள். என(து இறப்பு)க்குப்பின் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் நிராகரிப்பவர்களாய் மாறி விடாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த நான் கேட்டேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثني يحيى بن سعيد، حدثنا فضيل بن غزوان، حدثنا عكرمة، عن ابن عباس رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم النحر فقال " يا ايها الناس. اى يوم هذا ". قالوا يوم حرام. قال " فاى بلد هذا ". قالوا بلد حرام. قال " فاى شهر هذا ". قالوا شهر حرام. قال " فان دماءكم واموالكم واعراضكم عليكم حرام، كحرمة يومكم هذا، في بلدكم هذا في شهركم هذا ". فاعادها مرارا، ثم رفع راسه فقال " اللهم هل بلغت اللهم هل بلغت ". قال ابن عباس رضى الله عنهما فوالذي نفسي بيده انها لوصيته الى امته " فليبلغ الشاهد الغايب، لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1739
- Book Index
- 217
Grades
- -
