ஹதீஸ்கள்
#1737
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது நான் அங்கிருந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, “நான் இன்ன கிரியைக்குமுன் இன்ன கிரியை என எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். மற்றொருவர் எழுந்து, “நான் இன்னதற்குமுன் இன்னது என எண்ணியிருந்தேன். குர்பானி கொடுப்பதற்குமுன் தலையை மழித்துவிட்டேன்; கல்லெறிவதற்குமுன் குர்பானி கொடுத்துவிட்டேன்” என்பன போன்றவற்றைக் கூறலானார். அவை அனைத்திற்குமே நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை விடுபட்டதைச் செய்யுங்கள்” என்றே கூறினார்கள். அன்று கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் “குற்றமில்லை (விடுபட்டதைச்) செய்யுங் கள்” என்றே நபியவர்கள் விடையளித் தார்கள்.64 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “(அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் அமர்ந்திருந்தார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :
حدثنا سعيد بن يحيى بن سعيد، حدثنا ابي، حدثنا ابن جريج، حدثني الزهري، عن عيسى بن طلحة، عن عبد الله بن عمرو بن العاص رضى الله عنه حدثه انه، شهد النبي صلى الله عليه وسلم يخطب يوم النحر، فقام اليه رجل، فقال كنت احسب ان كذا قبل كذا. ثم قام اخر فقال كنت احسب ان كذا قبل كذا حلقت قبل ان انحر، نحرت قبل ان ارمي. واشباه ذلك. فقال النبي صلى الله عليه وسلم " افعل ولا حرج ". لهن كلهن، فما سيل يوميذ عن شىء الا قال افعل ولا حرج
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1737
- Book Index
- 215
Grades
- -
