ஹதீஸ்கள்
#1736
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (மினாவில் தமது வாகனத்தின் மீது) அமர்ந்திருந் தார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் (சில சந்தேகங்களைக்) கேட்கத் தொடங் கினர். ஒருவர், “நான் பலியிடுவதற்கு முன்பாக, தெரியாமல் தலையை மழித்து விட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை. (இப்போது குர்பானி பிராணியை) அறுப்பீராக!” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்து, “கல்லெறி வதற்கு முன்பு தெரியாமல் அறுத்து குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். நபியவர்கள், “குற்றமில்லை இப்போது கல்லெறிவீராக!” என்று கூறினார்கள். அன்று முந்திச் செய்யப்பட்டது என்றோ, பிந்திச் செய்யப்பட்டது என்றோ கேட்கப் பட்ட எந்தக் கேள்விக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “குற்றமில்லை (விடுபட்டதைச் இப்போது) செய்வீராக!” என்றே விடையளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن عيسى بن طلحة، عن عبد الله بن عمرو، ان رسول الله صلى الله عليه وسلم وقف في حجة الوداع، فجعلوا يسالونه، فقال رجل لم اشعر فحلقت قبل ان اذبح. قال " اذبح ولا حرج ". فجاء اخر فقال لم اشعر فنحرت قبل ان ارمي. قال " ارم ولا حرج ". فما سيل يوميذ عن شىء قدم ولا اخر الا قال افعل ولا حرج
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1736
- Book Index
- 214
Grades
- -
