ஹதீஸ்கள்
#1733
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள், (தவாஃபுஸ் ஸியாரா) செய்தபோது, ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் ஓர் ஆண் தன் மனைவியிடம் எதிர்பார்ப்பதை (தாம்பத்திய உறவு கொள்ள) நாடினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!” என்றேன். அதற்கு அவர்கள், “அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், “அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே ‘தவாஃபுல் இஃபாளா’ செய்துவிட்டார்” என்றனர். “அப்படியாயின் புறப்படுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ஸஃபிய்யா (ரலி) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் தவாஃபுல் இஃபாளா செய்தார் என ஆயிஷா (ரலி) அவர்களே கூறியதாகக் காணப்படுகிறது. அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن جعفر بن ربيعة، عن الاعرج، قال حدثني ابو سلمة بن عبد الرحمن، ان عايشة رضى الله عنها قالت حججنا مع النبي صلى الله عليه وسلم فافضنا يوم النحر، فحاضت صفية، فاراد النبي صلى الله عليه وسلم منها ما يريد الرجل من اهله. فقلت يا رسول الله انها حايض. قال " حابستنا هي ". قالوا يا رسول الله، افاضت يوم النحر. قال " اخرجوا ". ويذكر عن القاسم وعروة والاسود عن عايشة رضى الله عنها افاضت صفية يوم النحر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1733
- Book Index
- 211
Grades
- -
