ஹதீஸ்கள்
#1681
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஹஜ்ஜின்போது) முஸ்தலி ஃபாவில் தங்கினோம். அப்போது சவ்தா (ரலி) அவர்கள், கூட்ட நெரிசல் ஏற்படுவ தற்கு முன்பே, தாம் அங்கிருந்து (மினாவுக் குப்) புறப்பட நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர் மெதுவாக நடக்கக்கூடியவராக இருந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவ்வாறே, கூட்ட நெரிசலுக்கு முன்பே அவர் (மினா) புறப்பட்டுவிட்டார். நாங்கள் மட்டும் சுப்ஹுவரை அங்கேயே தங்கிவிட்டு, பிறகு நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது நாங்களும் புறப்பட்டோம். சவ்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்றதைப் போன்று நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும்விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாய் இருந்திருக்கும். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا افلح بن حميد، عن القاسم بن محمد، عن عايشة رضى الله عنها قالت نزلنا المزدلفة فاستاذنت النبي صلى الله عليه وسلم سودة ان تدفع قبل حطمة الناس، وكانت امراة بطيية، فاذن لها، فدفعت قبل حطمة الناس، واقمنا حتى اصبحنا نحن، ثم دفعنا بدفعه، فلان اكون استاذنت رسول الله صلى الله عليه وسلم كما استاذنت سودة احب الى من مفروح به
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1681
- Book Index
- 161
Grades
- -
