ஹதீஸ்கள்
#1679
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அஸ்மா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபா வில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா?” எனக் கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுதுவிட்டுப் பிறகு “சந்திரன் மறைந்து விட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றதும் “புறப்படுங்கள்” எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல்லெறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தமது இருப்பிடத்தில் சுப்ஹு தொழுதார்கள். அப்போது நான் அவர்களிடம், “அம்மா! நாம் விடியும் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகின்றதே!” என்றேன். அதற்கு அவர்கள், “மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண் பயணிகளுக்கு இவ்வாறு வர அனுமதியளித்துள்ளார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، عن يحيى، عن ابن جريج، قال حدثني عبد الله، مولى اسماء عن اسماء، انها نزلت ليلة جمع عند المزدلفة، فقامت تصلي، فصلت ساعة، ثم قالت يا بنى هل غاب القمر قلت لا. فصلت ساعة، ثم قالت هل غاب القمر قلت نعم. قالت فارتحلوا. فارتحلنا، ومضينا حتى رمت الجمرة، ثم رجعت فصلت الصبح في منزلها. فقلت لها يا هنتاه ما ارانا الا قد غلسنا. قالت يا بنى، ان رسول الله صلى الله عليه وسلم اذن للظعن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1679
- Book Index
- 159
Grades
- -
