ஹதீஸ்கள்
#1676
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர் களை முன்கூட்டியே (ஃபஜ்ருக்கு முன்பே மினாவிற்கு) அனுப்பிவிடுவார்கள். எனவே, அவர்கள் (பலவீனர்கள்) முஸ்தலிஃபாவில் ‘மஷ்அருல் ஹராம்’ எனுமிடத்தில் இரவில் (சிறிது நேரம்) தங்கி, அங்கு தமக்குத் தெரிந்த வகையில் அல்லாஹ்வை நினைவு கூர்வர். பிறகு இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்பே இவர்கள் (மினாவுக்குத்) திரும்பிவிடுவார்கள். அவர்களில் சிலர் ஃபஜ்ர் தொழுகைக் காக முன்கூட்டியே மினா சென்றுவிடுவர். இன்னும் சிலர் அதற்குப் பின்னால் செல்வர். அவர்கள் அங்கு சென்றதும் ‘ஜம்ரா’வில் கல்லெறிவர். பலவீனர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதற்கு) அனுமதி வழங்கியுள்ளார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن يونس، عن ابن شهاب، قال سالم وكان عبد الله بن عمر رضى الله عنهما يقدم ضعفة اهله، فيقفون عند المشعر الحرام بالمزدلفة بليل، فيذكرون الله ما بدا لهم، ثم يرجعون قبل ان يقف الامام، وقبل ان يدفع، فمنهم من يقدم منى لصلاة الفجر، ومنهم من يقدم بعد ذلك، فاذا قدموا رموا الجمرة، وكان ابن عمر رضى الله عنهما يقول ارخص في اوليك رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1676
- Book Index
- 156
Grades
- -
