ஹதீஸ்கள்
#1675
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். நாங்கள் இஷாவின் பாங்கு கூறப்படும் நேரத்திலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ முஸ்தலிஃபாவிற்கு வந்தோம். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், ஒருவரை பாங்கும் இகாமத்தும் கூறுமாறு கட்டளையிட, அவர் பாங்கும் இகாமத்தும் கூறினார். பின்னர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுதுவிட்டு அதன்பின் (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுதார் கள். பிறகு இரவு உணவைக் கொண்டுவரச் சொல்லி உண்டார்கள். பிறகு ஒருவருக்கு அவர்கள் கட்டளையிட, அவர் பாங்கும் இகாமத்தும் கூறினார். பிறகு இரண்டு ரக்அத்கள் இஷா தொழுதார்கள். விடிந்ததும் “நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதையும் இந்நாளில் இந்த நேரத்தில் தொழுததில்லை” என்று கூறினார்கள். மேலும், “இவ்விரு தொழுகைகளும் (இங்கு, இந்த தினத்தில் மட்டும்) அவற்றுக் குரிய (வழக்கமான) நேரங்களைவிட்டு மாற்றப்பட்டுள்ளன. (அதாவது) மஃக்ரிப் தொழுகை, மக்கள் முஸ்தலிஃபாவுக்கு வந்த பின்பு (இஷாவில்) என்றும், ஃபஜ்ர் தொழுகை ஃபஜ்ர் உதயமாகும் வேளை யில் (சற்று விரைவாக) என்றும் (ஹஜ்ஜின் போது முஸ்தலிஃபாவில் மட்டும்) மாற்றப் பட்டுள்ளன. இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1675
- Book Index
- 155
Grades
- -