ஹதீஸ்கள்
#1672
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) திரும்பி னார்கள். வழியிலுள்ள பள்ளத்தாக்கில் இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பிறகு சுருக்கமாக அங்கத் தூய்மை செய்தார்கள். நான் அவர்களிடம் “தொழப்போகிறீர் களா?” என்றேன். அதற்கு அவர்கள் “தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) இருக்கிறது!” என்றார்கள். பிறகு முஸ்தலிஃபாவிற்கு வந்து முழுமையாக அங்கத் தூய்மை செய்தார்கள். இகாமத் சொல்லப்பட்டதும் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு ஒவ்வொருவரும் தமது ஒட்டகத் தைத் தத்தமது இருப்பிடத்தில் படுக்க வைத்தார்கள். பிறகு (இஷா) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே (வேறு எதுவும்) தொழவில்லை. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن موسى بن عقبة، عن كريب، عن اسامة بن زيد رضى الله عنهما انه سمعه يقول دفع رسول الله صلى الله عليه وسلم من عرفة، فنزل الشعب، فبال ثم توضا، ولم يسبغ الوضوء. فقلت له الصلاة. فقال " الصلاة امامك ". فجاء المزدلفة، فتوضا، فاسبغ، ثم اقيمت الصلاة، فصلى المغرب، ثم اناخ كل انسان بعيره في منزله، ثم اقيمت الصلاة فصلى، ولم يصل بينهما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1672
- Book Index
- 152
Grades
- -
