ஹதீஸ்கள்
#1666
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உசாமா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது, “விடைபெறும் ஹஜ்ஜில் (அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவுக்குத்) திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பயண (வேக)ம் எவ்வாறு இருந்தது?” என உசாமா (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிதமான வேகத்தில் பயணிப்பார்கள். (நெரிசல் இல்லாத) விசாலமான இடம் கிடைத்ததும் விரைவாகச் செல்வார்கள்” எனக் கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இங்கு மூலத்தில் ‘விரைவாகச் செல்லல்’ என்பதைக் குறிக்க ‘நஸ்ஸு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) ‘நஸ்ஸு’ என்பது மிதமான வேகத்துக்கு (‘அனக்’) மேலான வேகத்தைக் குறிக்கும். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இங்கு மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘ஃபஜ்வத்’ எனும் சொல்லுக்கு ‘விசாலமானது’ என்பது பொருளாகும். ‘ஃபஜ்வாத்’, ‘ஃபிஜாஉ’ என்பவை இதன் பன்மைகளாகும்; ‘ரக்வத்’ (தோல் கிண்ணம்) என்பதற்கு ‘ரிகாஉ’ என்பது பன்மை என்பதைப்போல. (‘நஸ்ஸு’ என்பதிலிருந்து பிறந்த) ‘மனாஸ்’ எனும் சொல்லுக்கு ‘விரண்டோடும் நேரம்’ என்பது பொருள். “விரண்டோடி தப்பிக்கும் நேரமாக அது இல்லை” (38:3) என்கிறது குர்ஆன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن هشام بن عروة، عن ابيه، انه قال سيل اسامة وانا جالس، كيف كان رسول الله صلى الله عليه وسلم يسير في حجة الوداع حين دفع قال كان يسير العنق، فاذا وجد فجوة نص. قال هشام والنص فوق العنق. قال ابو عبد الله فجوة متسع، والجميع فجوات وفجاء، وكذلك ركوة وركاء. مناص ليس حين فرار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1666
- Book Index
- 147
Grades
- -
