ஹதீஸ்கள்
#1665
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவைச்) சுற்றி வருவார்கள்; ‘ஹும்ஸ்’ (கடினமான சமயப் பற்றுடையவர்)களைத் தவிர! ‘ஹும்ஸ்’ என்போர், குறைஷியரும் அவர்கள் பெற்றெடுத்த மக்களும் ஆவர்.50 இந்த ‘ஹும்ஸ்’கள் இறைவனுக்காக மக்களுக்கு நற்பணி ஆற்றிவந்தனர். அவர்களில் ஓர் ஆண் இன்னொரு ஆணுக்கு, தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ‘ஹும்ஸ்’கள் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார். மேலும், மக்கள் கூட்டம் அரஃபாவி லிருந்தே திரும்பிச் செல்வார்கள். ஆனால், (குறைஷியரான) ஹும்ஸ்களோ (எல்லாம் முடிந்த பின்பு) முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள். “பின்பு மக்கள் திரும்புகிற இடத்தி லிருந்து நீங்களும் திரும்புங்கள்” (2:199) எனும் இறைவசனம் ‘ஹும்ஸ்’கள் தொடர் பாகவே அருளப்பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அவர்கள் ‘ஜம்உ’ (முஸ்தலிஃபா) எனும் இடத்திலிருந்து திரும்பிச் செல்பவர்களா யிருந்தனர். எனவே, அரஃபாவிலிருந்து திரும்பிச் செல்லுமாறு அவர்கள் திருப்பி விடப்பட்டனர். அத்தியாயம் :
حدثنا فروة بن ابي المغراء، حدثنا علي بن مسهر، عن هشام بن عروة، قال عروة كان الناس يطوفون في الجاهلية عراة الا الحمس، والحمس قريش وما ولدت، وكانت الحمس يحتسبون على الناس يعطي الرجل الرجل الثياب يطوف فيها، وتعطي المراة المراة الثياب تطوف فيها، فمن لم يعطه الحمس طاف بالبيت عريانا، وكان يفيض جماعة الناس من عرفات، ويفيض الحمس من جمع. قال واخبرني ابي عن عايشة رضى الله عنها ان هذه الاية نزلت في الحمس {ثم افيضوا من حيث افاض الناس} قال كانوا يفيضون من جمع فدفعوا الى عرفات
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1665
- Book Index
- 146
Grades
- -
