ஹதீஸ்கள்
#1664
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் இஸ்லாத்தை ஏற்பதற்குமுன் ஒரு முறை) அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளன்று எனது ஒட்டகத்தைத் தொலைத்து விட்டேன். அதைத் தேடிக்கொண்டு வந்த போது, நபி (ஸல்) அவர்கள் அரஃபா பெரு வெளியில் தங்கியிருப்பதைக் கண்டேன். அப்போது நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (நபி (ஸல்) அவர்கள்), கடினமான சமயப் பற்றுடைய (குறைஷிக் குலத்த)வர் ஆயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என என்னுள் கூறிக் கொண்டேன்.49 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا عمرو، حدثنا محمد بن جبير بن مطعم، عن ابيه، كنت اطلب بعيرا لي. وحدثنا مسدد، حدثنا سفيان، عن عمرو، سمع محمد بن جبير، عن ابيه، جبير بن مطعم قال اضللت بعيرا لي، فذهبت اطلبه يوم عرفة، فرايت النبي صلى الله عليه وسلم واقفا بعرفة، فقلت هذا والله من الحمس فما شانه ها هنا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1664
- Book Index
- 145
Grades
- -
