ஹதீஸ்கள்
#1651
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (விடைபெறும் ஹஜ்ஜின் போது) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார் கள். நபி (ஸல்) அவர்கள் மற்றும் தல்ஹா (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானி பிராணி இருக்க வில்லை. யமனிலிருந்து அலீ (ரலி) அவர்கள் குர்பானி பிராணியுடன் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டியுள்ளார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்களில் குர்பானி பிராணி கொண்டுவந்தவர்கள் தவிர மற்றவர்கள் தங்களின் இஹ்ராமை உம்ராவுக்காக மாற்றிக்கொள்ளுமாறும் தவாஃப் செய்து தலை முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள் (சிலர்), “(இஹ்ராமிலிருந்து விடுபட்டபின்) தாம்பத்திய உறவை முடித்த கையோடு நாங்கள் ‘மினா’வுக்குச் செல்ல வேண்டுமா? என்று பேசிக்கொண்டார்கள்.45 இச்செய்தி, நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும், அவர்கள், “(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்வது செல்லும் என) நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், குர்பானி(ப் பிராணி கொண்டுவந்திருக்கமாட்டேன்; நான் குர்பானி பிராணியை மட்டும் என்னுடன் கொண்டு வந்திருக்கவில்லையாயின், இஹ்ராமி லிருந்து விடுபட்டிருப்பேன்” எனக் கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதைத் தவிர ஹஜ்ஜின் மற்றெல்லா கிரியைகளையும் நிறை வேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்தார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எல்லாரும் ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்கள். நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறேனே” எனக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா வின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்தபின் உம்ராவையும் நிறைவேற்றினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1651
- Book Index
- 132
Grades
- -