ஹதீஸ்கள்
#1628
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், “சிலர் சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் தவாஃப் செய்துவிட்டு, மார்க்கச் சொற்பொழிவாள ரிடத்தில் போய் அமர்ந்துவிட்டார்கள். பிறகு சூரியன் உதயமானபோது எழுந்து (தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், (சொற்பொழி வில் அமர்ந்தவர்களைக் குறித்து) “இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு, தொழுகை வெறுக்கப்படும் நேரம் வந்தவுடன் எழுந்து தொழுகிறார்கள்” என்று (கண்டித்துக்) கூறினார்கள்.38 அத்தியாயம் :
حدثنا الحسن بن عمر البصري، حدثنا يزيد بن زريع، عن حبيب، عن عطاء، عن عروة، عن عايشة رضى الله عنها ان ناسا، طافوا بالبيت بعد صلاة الصبح، ثم قعدوا الى المذكر، حتى اذا طلعت الشمس قاموا يصلون فقالت عايشة رضى الله عنها قعدوا حتى اذا كانت الساعة التي تكره فيها الصلاة قاموا يصلون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1628
- Book Index
- 112
Grades
- -
