ஹதீஸ்கள்
#1623
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “உம்ரா செய்யும் மனிதர் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் சுற்றுவதற்குமுன் தம் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்ளலாமா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, கஅபாவை ஏழு முறை சுற்றினார்கள்; பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா- மர்வாவிற்கு இடையில் சுற்றி னார்கள்” என்று கூறிவிட்டு, இப்னு உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு அல்லாஹ் வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உள்ளது” (33:21) என்ற இறைவசனத்தை ஓதினார்கள். நான் இதே கேள்வியை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட் டேன். அதற்கு, “ஸஃபா-மர்வாவுக்கு இடையில் சுற்றுவதற்கு முன்னால் மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) நெருங்கக் கூடாது” என அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا سفيان، عن عمرو، سالنا ابن عمر رضى الله عنهما ايقع الرجل على امراته في العمرة قبل ان يطوف بين الصفا والمروة قال قدم رسول الله صلى الله عليه وسلم فطاف بالبيت سبعا، ثم صلى خلف المقام ركعتين، وطاف بين الصفا والمروة، وقال {لقد كان لكم في رسول الله اسوة حسنة}. قال وسالت جابر بن عبد الله رضى الله عنهما فقال لا يقرب امراته حتى يطوف بين الصفا والمروة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1623
- Book Index
- 108
Grades
- -
