ஹதீஸ்கள்
#1618
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்காவில் ஹஜ் அதிகாரியாக இருந்த) இப்னு ஹிஷாம், ஆண்களுடன் (சேர்ந்து) பெண்களும் தவாஃப் செய்வதைத் தடுத்தபோது, “நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆண்களுடன் (சேர்ந்து) தவாஃப் செய்திருக்க, அவர்களை அவர் எப்படித் தடுக்கலாம்?” என்று தாம் கேள்வி எழுப்பியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். நான் (அவரிடம், “நபியவர்களின் துணைவியர் இவ்வாறு தவாஃப் செய்தது, (திரைக்கப்பால் நின்றே அவர்களிடம் பேச வேண்டும் என்ற) ‘ஹிஜாப்’ சட்டம் வந்த பின்பா? அல்லது அதற்கு முன்பா?” என்று கேட்டேன். அவர் “ஆம்! என் வாழ்நாளின் (அதிபதி)மீது சத்தியமாக! ஹிஜாபுடைய சட்டம் அருளப்பட்டதற்குப் பின்னரே இதை நான் கண்டேன்” என்றார். நான், “அது எப்படி? பெண்கள் ஆண்களோடு (ஒருவரோடொருவர்) கலந்துவிடுவார்களே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “கலந்துவிடமாட்டார்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களுடன் கலக்காமல் ஓரமாக தவாஃப் செய்வார்கள்; அப்போது ஒரு பெண், ‘இறைநம்பிக்கை யாளர்களின் தாயே! நடங்கள்! நாம் (சென்று ஹஜருல் அஸ்வதை) முத்தமிடுவோம்’ என்றார்; அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நீ போ(ய் முத்தமிடு; நான் வரவில்லை)!’ என்று மறுத்தார்கள். இரவிலும் பெண்கள் தம்மைத் திரையிட்டு மறைத்துக்கொண்டு சென்று ஆண்களோடு தவாஃப் செய்வார்கள். ஆனால், பெண்கள் கஅபாவினுள் நுழைய நாடினால், உள்ளே இருக்கும் ஆண்கள் வெளியேற்றப்படும்வரை அதற்காகக் காத்திருப்பார்கள்; நானும் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திப்போம்; அப்போது அவர்கள் ஸபீர் எனும் மலையின் நடுப்பகுதியில் தங்கி (இஃதிகாஃபில்) இருந்தார்கள்” என்று கூறினார். நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “(அப்போது) அவர்களின் ஹிஜாப் என்னவாக இருந்தது?” எனக் கேட்டேன். “ஆயிஷா (ரலி) அவர்கள், துருக்கி நாட்டுத் துணியாலான ஒரு கூடாரத்தில் இருந்தார்கள். அதில் ஒரு திரை இருந்தது. எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அதைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் இளஞ்சிவப்பு நிறமுள்ள சட்டை அணிந்திருந்ததை நான் பார்த்தேன்” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
وقال لي عمرو بن علي حدثنا ابو عاصم، قال ابن جريج اخبرنا قال اخبرني عطاء، اذ منع ابن هشام النساء الطواف مع الرجال قال كيف يمنعهن، وقد طاف نساء النبي صلى الله عليه وسلم مع الرجال قلت ابعد الحجاب او قبل قال اي لعمري لقد ادركته بعد الحجاب. قلت كيف يخالطن الرجال قال لم يكن يخالطن كانت عايشة رضى الله عنها تطوف حجرة من الرجال لا تخالطهم، فقالت امراة انطلقي نستلم يا ام المومنين. قالت {انطلقي} عنك. وابت. {وكن} يخرجن متنكرات بالليل، فيطفن مع الرجال، ولكنهن كن اذا دخلن البيت قمن حتى يدخلن واخرج الرجال، وكنت اتي عايشة انا وعبيد بن عمير وهي مجاورة في جوف ثبير. قلت وما حجابها قال هي في قبة تركية لها غشاء، وما بيننا وبينها غير ذلك، ورايت عليها درعا موردا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1618
- Book Index
- 103
Grades
- -
