ஹதீஸ்கள்
#1615
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இதைப் போன்றே ஹஜ் செய்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் என் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்களும் முதல் வேலையாக தவாஃப்தான் செய்தார்கள். பிறகு முஹாஜிர்களும் அன்சாரிகளும் இவ்வாறு செய்ததையே நான் பார்த்தேன். மேலும் என் தாயார் (அஸ்மா), “நானும் என் சகோதரியும் (ஆயிஷா) (கணவர்) ஸுபைரும் இன்னாரும் இன்னாரும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினோம். நாங்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு முத்தமிட்)டபின் (‘சயீ’ செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1615
- Book Index
- 100
Grades
- -