ஹதீஸ்கள்
#1611
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஸுபைர் பின் அரபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஹஜருல் அஸ்வத் (எனும் கறுப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்” எனக் கூறினார்கள். அப்போது நான், “கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “கருதுகிறீர் களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உமது ஊராகிய) யமனில் வைத்துக் கொள்வீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடு வதையும் கண்டேன்” என (மீண்டும்) கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا حماد، عن الزبير بن عربي، قال سال رجل ابن عمر رضى الله عنهما عن استلام الحجر،. فقال رايت رسول الله صلى الله عليه وسلم يستلمه ويقبله. قال قلت ارايت ان زحمت ارايت ان غلبت قال اجعل ارايت باليمن، رايت رسول الله صلى الله عليه وسلم يستلمه ويقبله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1611
- Book Index
- 97
Grades
- -
