ஹதீஸ்கள்
#1605
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதவாது: உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை நோக்கி, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நிச்சயமாக நான் அறிவேன்; நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால், நிச்சயமாக நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார்கள். பிறகு “நாம் ஏன் இப்போது தோள் களைக் குலுக்கியவாறு ஓடவேண்டும்? நாம் அன்று செய்தது நமது பலத்தை இணைவைப்பாளர்களுக்குக் காட்டுவதற் காகத்தானே! ஆனால், இன்று அவர்களை அல்லாஹ் அழித்துவிட்டான். (பிறகு ஏன் செய்ய வேண்டும்?)” எனக் கூறிவிட்டு, “எனினும், இது நபி (ஸல்) அவர்கள் செய்த ஒன்று. அதை விட்டுவிட நாம் விரும்ப வில்லை” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، اخبرنا محمد بن جعفر، قال اخبرني زيد بن اسلم، عن ابيه، ان عمر بن الخطاب رضى الله عنه قال للركن اما والله اني لاعلم انك حجر لا تضر ولا تنفع، ولولا اني رايت النبي صلى الله عليه وسلم استلمك ما استلمتك. فاستلمه، ثم قال فما لنا وللرمل انما كنا راءينا به المشركين، وقد اهلكهم الله. ثم قال شىء صنعه النبي صلى الله عليه وسلم فلا نحب ان نتركه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1605
- Book Index
- 91
Grades
- -
