ஹதீஸ்கள்
#1602
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (உம்ரத்துல் களாவிற்காக மக்கா) வந்தனர். அப்போது (குறைஷி) இணைவைப்பாளர் கள், “யஸ்ரிபின் (மதீனா) காய்ச்சலால் அவர்கள் நலிவடைந்த நிலையில் அவர் (முஹம்மத்) உங்களிடம் வந்திருக்கிறார்” என்று பேசிக்கொண்டனர். அப்போது (நலிவடையவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் (தவாஃபில் முதல்) மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கியவாறு விரைந்து ஓடுமாறும், ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே (மெதுவாக) நடந்து செல்லுமாறும் கட்டளை யிட்டார்கள். தவாஃபின் எல்லாச் சுற்று களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரண மாகவே நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிடவில்லை. அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد هو ابن زيد عن ايوب، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال قدم رسول الله صلى الله عليه وسلم واصحابه فقال المشركون انه يقدم عليكم، وقد وهنهم حمى يثرب. فامرهم النبي صلى الله عليه وسلم ان يرملوا الاشواط الثلاثة، وان يمشوا ما بين الركنين، ولم يمنعه ان يامرهم ان يرملوا الاشواط كلها الا الابقاء عليهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1602
- Book Index
- 88
Grades
- -
