ஹதீஸ்கள்
#1601
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி ஆண்டில் மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்துவிட்டார்கள்; பிறகு அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங் களும் இருந்தன. அவற்றையும் வெளி யேற்றினார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இ(தைச் செய்த)வர்களை அல்லாஹ் அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இவர்கள் அறிந்தே உள்ளார்கள்” என்று கூறினார்கள். பிறகு கஅபாவினுள் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறினார்கள்; அங்கு தொழவில்லை.33 அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، حدثنا ايوب، حدثنا عكرمة، عن ابن عباس رضى الله عنهما قال ان رسول الله صلى الله عليه وسلم لما قدم ابى ان يدخل البيت وفيه الالهة فامر بها فاخرجت فاخرجوا صورة ابراهيم واسماعيل في ايديهما الازلام فقال رسول الله صلى الله عليه وسلم " قاتلهم الله اما والله قد علموا انهما لم يستقسما بها قط ". فدخل البيت، فكبر في نواحيه، ولم يصل فيه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1601
- Book Index
- 87
Grades
- -
