ஹதீஸ்கள்
#1599
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் கஅபா வுக்குள் நுழையும்போது, நேராக நடந்து வாசலை முதுகுக்குப் பின்னாலாக்கி, எதிர் சுவருக்கும் தமக்கும் இடையே சுமார் மூன்று முழம் இருக்குமாறு நின்று தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுததாக பிலால் (ரலி) அவர்கள் கூறினார்களோ அந்த இடத்தைக் கண்டறிந்து, அதில் தொழ விரும்பியே இவ்வாறு செய்தார்கள். (இருப்பினும்,) கஅபாவுக்குள் விரும்பிய எத்திசையில் தொழுதாலும் அது யார்மீதும் தவறாகாது. அத்தியாயம் :
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله، اخبرنا موسى بن عقبة، عن نافع، عن ابن عمر رضى الله عنهما انه كان اذا دخل الكعبة مشى قبل الوجه حين يدخل، ويجعل الباب قبل الظهر، يمشي حتى يكون بينه وبين الجدار الذي قبل وجهه قريبا من ثلاث اذرع، فيصلي يتوخى المكان الذي اخبره بلال ان رسول الله صلى الله عليه وسلم صلى فيه، وليس على احد باس ان يصلي في اى نواحي البيت شاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1599
- Book Index
- 85
Grades
- -
