ஹதீஸ்கள்
#1594
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷைபா பின் உஸ்மான் பின் அபீதல்ஹா (ரலி) அவர்களுடன் கஅபா வில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது ஷைபா (ரலி) அவர்கள், “இந்த இடத்தில் உமர் (ரலி) அவர்கள் அமர்ந் திருந்தார்கள். அப்போது ‘இந்த கஅபாவில் உள்ள பொன்னையும் வெள்ளியையும் பங்குவைக்காமல் விடுவதில்லை எனத் தீர்மானித்துவிட்டேன்’ என்றார்கள். அப்போது நான் அவர்களிடம் ‘தங்களுடைய தோழர்கள் (நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவரும் அவ்வாறு செய்யவில்லையே?’ எனக் கூறினேன். அதற்கு ‘அந்த இருவரும்தான் நான் பின்பற்றுவதற்கு ஏற்ற மனிதர்கள்’ என உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்” என்றார்கள்.27 அத்தியாயம் :
حدثنا عبد الله بن عبد الوهاب، حدثنا خالد بن الحارث، حدثنا سفيان، حدثنا واصل الاحدب، عن ابي وايل، قال جيت الى شيبة. وحدثنا قبيصة، حدثنا سفيان، عن واصل، عن ابي وايل، قال جلست مع شيبة على الكرسي في الكعبة فقال لقد جلس هذا المجلس عمر رضى الله عنه فقال لقد هممت ان لا ادع فيها صفراء ولا بيضاء الا قسمته. قلت ان صاحبيك لم يفعلا. قال هما المران اقتدي بهما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1594
- Book Index
- 80
Grades
- -
