ஹதீஸ்கள்
#1586
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! உன் சமுதாயத்தார் அறி யாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையானால், கஅபாவை இடிக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்; (இடிக்கப்பட்டதும்) கஅபாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பகுதியை அதனுடன் சேர்த்து(க் கட்டி), அத(ன் வாசல்த)னைத் தரையோடு தரையாக்கியிருப்பேன்; மேலும், கிழக்கே ஒரு வாசல், மேற்கே ஒரு வாசல் என இரு வாசல்களை அதற்கு அமைத்திருப்பேன்; இதன் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் (கஅபாவை) எழுப்பியவனாய் ஆகியிருப்பேன்” என்றார்கள். இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கஅபாவை இடிக்கக் காரணமாக அமைந்தது, இந்தச் செய்திதான். “இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் அதை இடித்துக் கட்டியதையும் ‘ஹிஜ்ர்’ (எனும் வளைந்த) பகுதியை அதில் சேர்த்ததையும் நான் பார்த்தேன்; (இடிக்கும் போது) ஒட்டகத்தின் திமில்கள் போன்ற கற்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில இருப்பதைக் கண்டேன்” என (அறிவிப்பாளர்) யஸீத் பின் ரூமான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்களிடம், “அந்த அடித்தளம் இப்போது எங்கே உள்ளது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இப்போதே அதை உனக்குக் காட்டுகிறேன்” என்றார். அவருடன் ‘ஹிஜ்ர்’ எனும் வளைந்த பகுதிக்கு நான் சென்றேன். ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, ‘இந்த இடம்தான்’ என்றார். நான் அதை அளந்து பார்த்தபோது, ஹிஜ்ர் எனும் பகுதியிலிருந்து சுமார் ஆறு முழங்கள் தள்ளி அது இருந்தது.22 அத்தியாயம் :
حدثنا بيان بن عمرو، حدثنا يزيد، حدثنا جرير بن حازم، حدثنا يزيد بن رومان، عن عروة، عن عايشة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم قال لها " يا عايشة لولا ان قومك حديث عهد بجاهلية لامرت بالبيت فهدم، فادخلت فيه ما اخرج منه والزقته بالارض، وجعلت له بابين بابا شرقيا وبابا غربيا، فبلغت به اساس ابراهيم ". فذلك الذي حمل ابن الزبير رضى الله عنهما على هدمه. قال يزيد وشهدت ابن الزبير حين هدمه وبناه وادخل فيه من الحجر، وقد رايت اساس ابراهيم حجارة كاسنمة الابل. قال جرير فقلت له اين موضعه قال اريكه الان. فدخلت معه الحجر فاشار الى مكان فقال ها هنا. قال جرير فحزرت من الحجر ستة اذرع او نحوها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1586
- Book Index
- 72
Grades
- -
