ஹதீஸ்கள்
#1564
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக் கால) மக்கள் கருதினர். (துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபருக்கு மாற்றினார்கள். (ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு மறைந்து, காலடித் தடங்கள் அழிந்து, ஸஃபர் மாதமும் கடந்துவிட்டால் உம்ரா செய்பவர் உம்ரா செய்யலாம் என்றும் அவர்கள் கூறிவந்தனர். நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்களாக (மக்கா நகருக்கு) வந்தபோது நபி (ஸல்) அவர்கள், மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டளையிட்டார்கள்.18 இது தோழர்களுக்கு மிகக் கடுமையானதாகத் தெரிந்தது. இதனால் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமி லிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு “(தடை செய்யப்படாத) அனைத்துச் செயல்களும் அனுமதிக்கப்படும்” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، حدثنا ابن طاوس، عن ابيه، عن ابن عباس رضى الله عنهما قال كانوا يرون ان العمرة في اشهر الحج من افجر الفجور في الارض، ويجعلون المحرم صفرا ويقولون اذا برا الدبر، وعفا الاثر، وانسلخ صفر، حلت العمرة لمن اعتمر. قدم النبي صلى الله عليه وسلم واصحابه صبيحة رابعة مهلين بالحج، فامرهم ان يجعلوها عمرة فتعاظم ذلك عندهم فقالوا يا رسول الله اى الحل قال " حل كله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1564
- Book Index
- 50
Grades
- -
