ஹதீஸ்கள்
#1561
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது அது ஹஜ் மட்டும்தான் என்றே நாங்கள் கருதினோம். நாங்கள் மக்காவை வந்த டைந்ததும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு, குர்பானிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். ஆனால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்ததால் தவாஃப் செய்யவில்லை. ‘அல்முஹஸ்ஸப்’ (எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்தபோது, நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர்; ஆனால், நானோ ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகிறேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “நாம் மக்காவை வந்தடைந்த இரவுகளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன். “அப்படியானால் உன் சகோதரருடன் ‘தன்யீம்’ எனும் இடத்திற்குச் சென்று உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து அதனை முடித்து இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள்.16 (நபியவர்களின் மற்றொரு மனைவி யான) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நானும் மக்களின் பயணத்தைத் தடுத்துவிட்டதாக உணர்கி றேன்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உன் கழுத்தறுந்து போக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே!) துல்ஹஜ் பத்தாம் நாளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா ‘ஆம், செய்துவிட்டேன்’ என்றார். “பரவாயில்லை; புறப்படு!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதன் பிறகு என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தபோது, அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக்கொண்டிருந்தார்கள். நான் குன்றிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன்; அல்லது அவர்கள் இறங்கிக்கொண்டிருந் தார்கள்; நான் ஏறிக்கொண்டிருந்தேன். அத்தியாயம் :
حدثنا عثمان، حدثنا جرير، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عايشة رضى الله عنها خرجنا مع النبي صلى الله عليه وسلم ولا نرى الا انه الحج، فلما قدمنا تطوفنا بالبيت، فامر النبي صلى الله عليه وسلم من لم يكن ساق الهدى ان يحل، فحل من لم يكن ساق الهدى، ونساوه لم يسقن فاحللن، قالت عايشة رضى الله عنها فحضت فلم اطف بالبيت، فلما كانت ليلة الحصبة قالت يا رسول الله، يرجع الناس بعمرة وحجة وارجع انا بحجة قال " وما طفت ليالي قدمنا مكة ". قلت لا. قال " فاذهبي مع اخيك الى التنعيم، فاهلي بعمرة ثم موعدك كذا وكذا ". قالت صفية ما اراني الا حابستهم. قال " عقرى حلقى، اوما طفت يوم النحر ". قالت قلت بلى. قال " لا باس، انفري ". قالت عايشة رضى الله عنها فلقيني النبي صلى الله عليه وسلم وهو مصعد من مكة، وانا منهبطة عليها، او انا مصعدة وهو منهبط منها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1561
- Book Index
- 47
Grades
- -
