ஹதீஸ்கள்
#1551
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஹஜ் பயணத்தில்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதார்கள். பிறகு விடியும்வரை அங்கேயே இரவில் தங்கினார்கள். பிறகு வாகனத்தின் மீதமர்ந்து ‘பைதா’ எனுமிடத் தில் வாகனம் நிலைக்கு வந்தபோது, ‘அல்ஹம்து லில்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹ் தூயவன், அல்லாஹ் மிகப் பெரியவன்) எனக் கூறினார்கள். பிறகு ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற் காகவும் இஹ்ராம் கட்டி, தல்பியா கூறினார்கள். மக்களும் ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்குமே இஹ்ராம் கட்டி தல்பியா கூறினர். நாங்கள் (மக்கா) வந்(து உம்ராவை முடித்)தபோது இஹ்ராமி லிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் அவ்வாறே செய்தனர்; துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கடடினார்கள். நபி (ஸல்) அவர்கள் (குர்பானி) ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளன்று இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، حدثنا ايوب، عن ابي قلابة، عن انس رضى الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم ونحن معه بالمدينة الظهر اربعا، والعصر بذي الحليفة ركعتين، ثم بات بها حتى اصبح، ثم ركب حتى استوت به على البيداء، حمد الله وسبح وكبر، ثم اهل بحج وعمرة، واهل الناس بهما، فلما قدمنا امر الناس فحلوا، حتى كان يوم التروية اهلوا بالحج قال ونحر النبي صلى الله عليه وسلم بدنات بيده قياما، وذبح رسول الله صلى الله عليه وسلم بالمدينة كبشين املحين. قال ابو عبد الله قال بعضهم هذا عن ايوب عن رجل عن انس
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1551
- Book Index
- 37
Grades
- -
