ஹதீஸ்கள்
#1545
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், எண்ணெய் தடவித் தலைசீவி கீழாடையும் மேல் துண்டும் அணிந்துகொண்டு, தம் தோழர் களோடு மதீனாவிலிருந்து (விடைபெறும் ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டார்கள். உடல்மீது ஒட்டிக்கொள்ளும் அளவுக்குக் குங்குமப்பூ தோய்க்கப்பட்ட ஆடையைத் தடை செய்தார்களேயன்றி மேல்துண்டு, கீழாடை போன்றவற்றை அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. ‘துல்ஹுலைஃபா’விற்குக் காலை நேரத்தில் வந்தடைந்தார்கள். பிறகு தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறியமர்ந்து ‘பைதா’ எனும் (குன்றுப்) பகுதியின் சமதளத்தை அடைந்ததும் அவர்களும் அவர்களின் தோழர்களும் இஹ்ராம் கட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது (குர்பானி) ஒட்டகத்தில் அடையாள மாலையைத் தொங்கவிட்டார் கள். இந்நிகழ்ச்சி துல்கஅதாவில் ஐந்து நாட்கள் எஞ்சியிருக்கும்போது நடந்தது. துல்ஹஜ் ஐந்தாம் நாள் மக்கா சென்ற டைந்தபோது, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா-மர்வாவிற்கு மத்தியில் ஓடினார்கள். (உம்ராவை முடித்தாலும்) அவர்கள் குர்பானியின் ஒட்டகத்திற்கு அடையாள மாலை அணிவித்து தம்மோடு கொண்டுவந்ததனால், (தலைமுடி களைந்து) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. பிறகு ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிய நிலையில் மக்காவின் மேற்பகுதியில் ஹஜூன் எனும் மலைக்கு அருகில் இறங்கினார்கள். மக்கா வந்ததும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்த அவர்கள், அரஃபாவிலிருந்து திரும்பிய பின்னரே மீண்டும் கஅபாவை நெருங்கினார்கள். தம் தோழர்கள், கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருமாறும், ஸஃபா, மர்வா இடையில் ஓடுமாறும் பிறகு தலைமுடியைக் குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். இது, தம்மோடு குர்பானிக்கான ஒட்டகங்களைக் கொண்டுவராதவர்களுக்குச் சொல்லப் பட்டதாகும். அவர்களில் துணைவியோடு வந்தவர்கள் தாம்பத்திய உறவு கொள்வது, நறுமணங்கள், (வண்ண) ஆடைகள் ஆகியவை அப்போது அனுமதிக்கப்பட்ட வையாகும். அத்தியாயம் :
حدثنا محمد بن ابي بكر المقدمي، حدثنا فضيل بن سليمان، قال حدثني موسى بن عقبة، قال اخبرني كريب، عن عبد الله بن عباس رضى الله عنهما قال انطلق النبي صلى الله عليه وسلم من المدينة، بعد ما ترجل وادهن ولبس ازاره ورداءه، هو واصحابه، فلم ينه عن شىء من الاردية والازر تلبس الا المزعفرة التي تردع على الجلد، فاصبح بذي الحليفة، ركب راحلته حتى استوى على البيداء، اهل هو واصحابه وقلد بدنته، وذلك لخمس بقين من ذي القعدة، فقدم مكة لاربع ليال خلون من ذي الحجة، فطاف بالبيت وسعى بين الصفا والمروة، ولم يحل من اجل بدنه لانه قلدها، ثم نزل باعلى مكة عند الحجون، وهو مهل بالحج، ولم يقرب الكعبة بعد طوافه بها حتى رجع من عرفة، وامر اصحابه ان يطوفوا بالبيت وبين الصفا والمروة، ثم يقصروا من رءوسهم ثم يحلوا، وذلك لمن لم يكن معه بدنة قلدها، ومن كانت معه امراته فهي له حلال، والطيب والثياب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1545
- Book Index
- 31
Grades
- -
