ஹதீஸ்கள்
#1537
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்த நிலையில், நறுமண எண்ணெய் பூசாமல் நறுமணமற்ற) ஆலிவ் எண்ணெய்யைப் பூசியதாக இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் நான் கூறினேன். அப்போது, “இப்னு உமரின் கூற்றை வைத்து நீர் என்ன செய்யப்போகிறீர்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோது, தமது தலை வகிட்டில் பூசியிருந்த நறுமணத்தின் ஒளியை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن منصور، عن سعيد بن جبير، قال كان ابن عمر رضى الله عنهما يدهن بالزيت. فذكرته لابراهيم قال ما تصنع بقوله حدثني الاسود عن عايشة رضى الله عنها قالت كاني انظر الى وبيص الطيب في مفارق رسول الله صلى الله عليه وسلم وهو محرم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1537
- Book Index
- 25
Grades
- -
