ஹதீஸ்கள்
#1536
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உமர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு இறை அறிவிப்பு (வஹீ) வரும்போது அவர்களை எனக்குக் காட்டுங்கள்” என்று சொல்லியிருந்தேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ‘ஜிஇர்ரானா’ எனுமிடத்தில் இருந்தபோது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு இறை அறிவிப்பு (வஹீ) வந்தது. உமர் (ரலி) அவர்கள் என்னை சைகை செய்து அழைத்ததும் நான் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத்துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட் டார். அவரிடம் “உம் மீதுள்ள நறு மணத்தை மூன்று முறை கழுவுவீராக! (தைக்கப்பட்ட) உமது நீளங்கியைக் களைவீராக! உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்வீராக!” என்று கூறினார்கள். “மும்முறை கழுவச் சொன்னது நன்கு தூய்மைப்படுத்தவா?” என்று (அறிவிப்பாள ரான) அதாஉ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். அத்தியாயம் :
قال ابو عاصم اخبرنا ابن جريج، اخبرني عطاء، ان صفوان بن يعلى، اخبره ان يعلى قال لعمر رضى الله عنه ارني النبي صلى الله عليه وسلم حين يوحى اليه قال فبينما النبي صلى الله عليه وسلم بالجعرانة، ومعه نفر من اصحابه، جاءه رجل فقال يا رسول الله كيف ترى في رجل احرم بعمرة، وهو متضمخ بطيب فسكت النبي صلى الله عليه وسلم ساعة فجاءه الوحى، فاشار عمر رضى الله عنه الى يعلى، فجاء يعلى، وعلى رسول الله صلى الله عليه وسلم ثوب قد اظل به فادخل راسه، فاذا رسول الله صلى الله عليه وسلم محمر الوجه، وهو يغط ثم سري عنه فقال " اين الذي سال عن العمرة " فاتي برجل فقال " اغسل الطيب الذي بك ثلاث مرات، وانزع عنك الجبة، واصنع في عمرتك كما تصنع في حجتك ". قلت لعطاء اراد الانقاء حين امره ان يغسل ثلاث مرات قال نعم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1536
- Book Index
- 24
Grades
- -
